ரஜினி படத்தில் இருந்து விலகியது ஏன்.. முதல் முறையாக விளக்கம் கொடுத்த சுந்தர் சி
கமல் ஹாசன் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படம் தலைவர் 173. ஆனால், திடீரென இப்படத்திலிருந்து இயக்குநர் சுந்தர் சி விலகினார். இவர் ஏன் திடீரென விலகினார் என்று ரசிகர்கள் ஷாக்கானார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி படத்தில் இருந்து விலகியது குறித்து சுந்தர் சி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர், உண்மையில் சொல்லப்போனால் ரஜினி சார் படத்தில் எனக்கு அதிக பிரஷர் இருந்தது. இதுவரை என்னுடைய விருப்பம் போல் தான் படங்கள் இயக்கினேன், மக்களுக்கு பிடிக்கும் என தோன்றினால் அதை செய்துவிடுவேன்.
ஆனால் இவ்வளவு பெரிய படம் செய்யும் போது என் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க முடியாது. அந்த படத்தில் அதீத அழுத்தம் இருந்தது. அந்த ப்ராஜெக்ட்டுக்கு உண்மையாக இருக்க முடியவில்லை, அதனால்தான் விலகினேன். ரஜினி சாரிடம் சொல்லிவிட்டு தான் படத்திலிருந்து நான் விலகப்போவதாக அறிவித்தேன்" என கூறியுள்ளார்.