சுனிதா வில்லியம்ஸை ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றது ஏன்? வெளியான தகவல்..
சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 286 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பி இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாள் பயணமாக கடந்த 2024 ஜூன் 5 ஆம் தேதி சென்று அங்கு எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹோக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் போர்புனோவ் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பான முறையில் இறங்கினார்.
விண்கலத்தில் இருந்து வெளியே வந்ததும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டனர். அப்படி அவர்கள ஸ்ட்ரெட்ட்சரில் அழைத்து செல்லவேண்டிய காரணம் என்ன என்ற விளக்கம் வெளியாகியுள்ளது.
ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றது ஏன்
சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் எலும்புகள் பலவீனமாகி நடப்பதற்கே அதிக வலியை தர வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி, மருத்துவ உதவிகள் மூலம்தான் பழைய நிலைக்கு விரைவில் திரும்பமுடியும்.
அதனால் விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் மிகக்கும் நிலையில் இத்தனை நாட்கள் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியதும் உடனடியாக எழுந்து நடக்க முடியாது. இதனால் தான் விண்கலத்தில் இருந்து வெளியே வந்ததும் சுனி தா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செய்யப்பட்டார்களாம்.