இது நம்ம லிஸ்ட்லயே இல்லை! பிக்பாஸ் வீட்டுக்குள் சன்னிலியோன்!

bollywood biggboss15 sunnyleone madhuban
By Edward Dec 27, 2021 07:55 AM GMT
Report

பிரபல நிகழ்ச்சியை மையமாக வைத்து 15 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். பாலிவுட்டில் தற்போது சூப்பர்ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி 90 நாட்களுக்கு முன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பலர் உள்ளே வந்து பிரமோஷன் செய்து வந்துள்ளனர். அப்படி பிக்பாஸ் 15 சீசனிற்கு நடிகை சன்னி லியோன் சென்றுள்ளார்.

சமீபத்தில் நடனமாடிய மதுபன் பாடலின் பிரமோஷனுக்காக உள்ளே சென்றுள்ளார். கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாப்பான முறையில் இருந்து போட்டியாளர்களுடன் உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நிகழ்ச்சியில் மீண்டும் சன்னி லியோன் கலந்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இதுபற்றி வரும் செய்திகள் பொய் என்று கூறியுள்ளார் சன்னி லியோன். பிக்பாஸ் வீட்டிற்குள் பலமுறை சென்றிருக்கிறேன். தற்போது அந்த எண்னம் இல்லை. என் குழந்தைகளை பார்த்துக்கொள்ளவே நேரம் குறைவாக இருக்கிறது.

அதனால் பிரமோஷனுக்காக மட்டுமே செல்கிறேன் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்நிலையில், மதுபன் பாடல் இந்து மக்களை இழிவு படுத்துவதாக சன்னி லியோன் மீது புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.