சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 ரக்ஷிதா சுரேஷ்-ஆ இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்க..
சூப்பர் சிங்கர்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வெற்றிப்பெற்றவர்கள் தற்போது சினிமா வாய்ப்பு பெற்று பிரபலங்களாகிவிடுவார்கள்.
ரக்ஷிதா சுரேஷ்
அந்தவகையில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்டார். அதன்பின் சூப்பர் சிங்கர் 6 சீசனில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இளையரஜா, ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
சமீபத்தில் கூட அமரன் படத்தில் வெண்ணிலவு சாரல் நீ என்ற பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா, சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.