CWC சிவாங்கிக்கு எப்படியோ இப்போ இங்க இவங்க!! சூப்பர் சிங்கர் 9 பைனல் லிஸ்ட்-ஐ விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Super Singer Star Vijay Cooku with Comali
By Edward May 26, 2023 06:00 PM GMT
Report

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்து டாப் இடத்தினை பிடித்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி. அப்படி பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்து மக்கள் மத்தியில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றும் வரும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர்.

சீனியர், ஜூனியர் என்று நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது இறுதி கட்டத்திற்கு நெருங்கி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பைனல் லிஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் அப்ஜித், பூஜா, அருணா போன்ற மூன்று பேர் பைனல் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார்கள். தற்போது பூஜா தேர்வாகி இருப்பது தான் சூப்பர் சிங்கர் மத்தியிலும் இணையத்திலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சி என்றாலே தகுதியான திறமை இருப்பவர்களை விட்டுவிட்டு டிஆர்பிக்காக உழைத்தவர்களை தான் வெற்றியாளர்களாக தேர்வு செய்கிறார்கள் என்ற பல விமர்சனங்கள் மக்கள் மத்தியில் ஆண்டுக்காண்டு நடந்து வருகிறது.

அந்தவகையில் சமீபத்தில் குக் வித் கோமாளி 4 சீசனில் சிவாங்கி எப்படி இறுதி சுற்றுக்கு தேர்வானார் என்று கேள்விகளை கேட்டு வந்ததை போல் தற்போது பூஜாவிற்கு இதே கேள்வி எழுந்துள்ளது.

டிஜே பிளாக் மற்றும் பூஜாவின் ரொமான்ஸ் போர்ஷனை வைத்து ஓட்டிக்கொண்டு வந்தனர். அப்படி திறமையுள்ளவர்களை தேர்வு செய்ய மாட்டீர்களா என்று கலாய்த்து வருகிறார்க்ள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ரசிகர்கள்.

இதேபோல் கடந்த சீசனில் கார்த்திக் தேவ்ராஜ் மற்றும் மானசாவை வைத்து ஓட்டினார்கள். மேலும் கடந்த ஜூனியர் சீசனில் வெற்றிப்பெற்ற கிரிஷாங்கிற்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் மக்கள் மனதை ஈர்த்தவர் நேஹா தான் என்று பலர் விஜய் டிவியை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.