காதல் தோல்வியால் வலியை சந்தித்தேன்!! சூப்பர் சிங்கர் சிவாங்கி ஓப்பன் டாக்..
சூப்பர் சிங்கர் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.
பிரேக்-அப்
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இதற்குமுன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா" என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஆம், "ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், ஆனால் இப்போது எனக்கு பிரேக்-அப் ஆகிவிட்டது. எனக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart break எனக்கு வலிமையை கொடுத்துள்ளது.
அதன்பின் என்னை நானே பார்த்துக்கொள்ள துவங்கிவிட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருக்காங்க, நமக்கு அவர்களை பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு நம்மை பிடிக்கணும் என்கிற அவசியம் இல்லை ரிலேஷன்ஷிப்பில். என்ன பண்றது Heart breaks are important" என்று சிவாங்கி கூறியிருக்கிறார். இதனை கேள்விப்பட்ட சிவாங்கி ரசிகர்கள் யார் அந்த பையன் என்று கேளி எழுப்பி வருகிறார்கள்.