30 ஆயிரத்துக்கு ஹாண்ட் பேக்!! சூப்பர் சிங்கர் சிவாங்கியின் சொத்து மதிப்பு பல கோடியா..
சூப்பர் சிங்கர் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் வைத்திருக்கும் ஹாண்ட் பேக் 30 ஆயிரம் ரூபாய். இதுபோல் பல பேக் வைத்திருக்கிறேன், 30 ஆயிரத்திற்கு மேல் பேக் என்னிடம் இல்லை.
லூயிஸ் விட்டான் பேக் வாங்கணும் ஆசை. சின்ன பேக் ஒரு லட்சம் வரும். பெரிய பேக் 4 லட்சம் இருக்கும், சீக்கிரம் வாங்கலாம் என்று சிவாங்கி கூறியுள்ளார். மேலும் சிவாங்கியின் சொத்து மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தொகுப்பாளினி கூறியிருக்கிறார். ஆமாம், கண்டிப்பா இருக்கும் என்று சிவாங்கி சிரித்த படி கூறியிருக்கிறார்.