சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 3-வது இறுதிச்சுற்று போட்டியாளர் இவர் தான்..வைரல் வீடியோ
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு வருகிறார்கள்.
இப்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ன் இறுதி சுற்று போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் போட்டி நடந்துக்கொண்டிருக்கிறது. அதில் முதல் இறுதிச்சுற்று போட்டியாளராக ஆத்யாவும் 2வது இறுதிச்சுற்று போட்டியாளராக சாரா சுருதியும் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் யார் 3வது இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது 3வது ஃபைனலிஸ்ட் போட்டியாளர் யார் என்ற பிரமோவை சூப்பர் சிங்கர் குழுவினர் அறிவித்துள்ளனர்.
3-வது Finalist நஸ்ரின்
வரும் வார எபிசோட்டில் பாடிக்கொண்டிருந்த போட்டியாளர் நஸ்ரின் தான் 3வது இறுதிச்சுற்று போட்டியாளர் என்று அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த நஸ்ரின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.
