தகுதியானவர் வெற்றி பெறவில்லை? உண்மையான சூப்பர் சிங்கர் 8 வெற்றியாளர் இவர் தான்!!
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்தவர்கள் பெரும்பாலும் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி விடுவார்கள்.

இறுதி போட்டி
அந்த அளவிற்கு புகழ் பெற்ற இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு வந்தது. சூப்பர் சிங்கர் ஜூனியர் 8ன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. யுவன் சங்கராஜா சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டார்.
பீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என 5 போட்டியாளர்கள் நன்றாக பாடியதில் முதல் இடத்தினை பிடித்து 60 லட்சம் மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் வீடினை கைப்பற்றினார் குட்டி எஸ்பிபி என்று கூறப்படும் கிரியாங். முதல் ரன்னர் அப் இடத்தினை 5 லட்சம் பரிசுத்தொகையோடு ரிஹானா கைப்பற்றினார்,
இதையடுத்து 2ஆம் ரன்னர் அப் இடத்தை நேஹா 3 லட்சம் மற்றும் 5 சவரன் தங்க காயினை பரிசாக பெற்றார்.

வெற்றி பெற்ற போட்டியாளர்கள்
இந்நிலையில் ஆண்டுதோறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது தகுதியானவர்களுக்கு டைட்டிலை கொடுக்கபடவில்லை என்ற குற்றச்சாட்டு வந்த வண்ணம் இருந்து வருகிறது. அதேபோல் இந்த சீசனிலும் அப்படியான முறைக்கேடு நடந்துள்ளது.
மக்கள் ஓட்டில் நேஹா தான் டைட்டிலை வென்றிருக்க வேண்டும் என்றும் இந்த சீசனில் முதல் இடத்திற்கு தகுதியானவர் நேஹா தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
மேலும், விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் கூட நேஹா தான் உண்மையான வெற்றியாளர் என்றும் நாங்கள் கஷ்டப்பட்டு வாக்களித்த போட்டியாளரை வெற்றியாளாராக அறிவிக்காமல் இருக்க ஏன் ஓட்டிங் வைக்கிறீர்கள் என்று கடுமையான விமர்சன கருத்தினை பதிவிட்டு வருகிறார்கள்.