சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாடகி சித்ரா.. அவருக்கு பதில் இவரா? வைரல் ப்ரோமோ

Radha Super Singer TV Program
By Bhavya May 15, 2025 01:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். 2007ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சூப்பர் சிங்கர் ஷோ பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், இதுவரை நான்கு இறுதி போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். மேலும் இந்த வாரம் ஐந்தாவது இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்க வைல்டு கார்டு சுற்று நடைபெறவுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாடகி சித்ரா.. அவருக்கு பதில் இவரா? வைரல் ப்ரோமோ | Super Singer New Judge Promo Video Goes Viral

இவரா?

இந்நிலையில், இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த வாரம் நடக்கும் வைல்டு கார்டு சுற்றில் பாடகி சித்ரா நடுவராக இல்லை.

இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் பாடகர் மனோவுடன் இணைந்து பிரபல நடிகை ஒருவர் நடுவராக வந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை ராதா தான்.

80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ராதா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். மேலும் வைல்டு கார்டு சுற்றில் நடுவராகியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,