மன்மத லீலை நடிகருடன் காதல் உறவில் சூப்பர் சிங்கர் பிரகதி..
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி குருப்ரசாத். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமாகி, தற்போது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி ஆகியுள்ளார்.
ஆம், தமிழில் வெளிவந்த பல படங்களில் இடம்பெற்றுள்ள பல பாடல்களை இவர் பாடியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவு செய்து சர்ச்சையில் சிக்குவார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் அசோக் செல்வனுடன், சூப்பர் சிங்கர் பிரகதி காதல் உருவில் இருந்ததாக பெரிதும் கூறப்பட்டது. ஆனால், இவர்களுக்கும் இடையே காதல் இல்லை என்று அதன்பின் செய்திகள் வெளிவர, இருவரின் காதல் கதை முடிவுக்கு வந்தது.
ஆனால், உண்மையிலேயே இருவரும் காதலித்தார்களா? இல்லையா? என்று அவர்களை தான் கேட்க வேண்டும். அசோக் செல்வன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை எனும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.