மேக்கப் போடாத வீடியோவை பகிர்ந்த சூப்பர் சிங்கர் பிரகதி!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள்.
அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாடகி பிரகதி.
தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது சுத்தமாக மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தான் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களை அறிமுகப்படுத்துவதை பார்த்த நெட்டிசன்கள் தமிழில் பேசுமாறு கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.