நம்ம சிங்கப்பூர் ஈழப்பெண் சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! 26 வயதில் மயக்கும் புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
ஜூனியர், சீனியர் என்று இரு தொகுப்புகளாக நடைபெற்று வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது சீனியர் 10 சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி இடத்திற்கு வரும் போட்டியாளர்கல் சிலர் சினிமாத்துறையில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
அப்படி, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூர் - அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணாக கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு வந்து இரண்டாம் இடத்தினை பிடித்தவர் பிரகதி குருபிரசாத்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
தற்போது பாடல் பாடுவதையும் தாண்டி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கிளாமர் ரூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். தற்போது 26 வயதாகும் பிரகதி சேலையில் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.