சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது!! அடையாளம் தெரியாமல் வளர்ந்துட்டாங்களே..

Super Singer
By Edward Jan 16, 2023 05:06 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவுகளில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெளியில் சென்று படவாய்ப்பினை எப்படியாவது பெற்று பிரபலமாகிவிடுவார்கள்.

அப்படி சூப்பர் சிங்கர் 4 சீசனில் கலந்து கொண்டவர் தான் கிராமத்து சிறுமி பிரித்திகா. கூரைவீட்டி பின்னணியில் இருந்து ஏழ்மையான குடும்பத்தில் இருந்து அந்த சீசனில் டைட்டில் வின்னராகவும் ஆகினார்.

பல லட்சம் மதிப்புள்ள பிளாட்டினை தட்டிச்சென்ற பிரித்திகா சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரேவொரு பாடல் மட்டுமே பாடியிருக்கிறார். இதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் கிராமத்திலேயே செட்டிலாகிவிட்டார் பிரித்திகா.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து பாடல்களை பாடி வருகிறார். தற்போது 18 வயதை எட்டியிருக்கும் பிரித்திகா வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் பார்த்து சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது என ஷாக்காகி வருகிறார்கள்.