ஒரே ஒரு பாடல் தான்! கோடியில் புரண்ட சூப்பர் சிங்கர் பிரியங்கா..

singer supersinger priyanka spb
By Edward Feb 10, 2022 08:50 PM GMT
Report
130 Shares

பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியால் பலர் சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறார்கள். அதில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா.

டைட்டில் பெறாவிட்டாலும் அவர் பாடிய பாடலான சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் இன்னும் மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. அப்பாடலை எங்கு சென்றாலும் பிரியங்கா பாடாமல் வரவே மாட்டார். அப்பாடலை ஒருமுறை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுடனும் கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து பாடியுள்ளார் பிரியங்கா.

அப்படி சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரியங்கா அப்பாடலை பாடியிருந்தார். அப்போது அப்பாடலால் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறார் பிரியங்கா என்று மைனா நந்தினி கூற ஆமாம் என்று பிரியங்கா சிரித்தப்படி கூறியுள்ளார்.

அவரை போல் பல சூப்பர் சிங்கர் பிரபலங்கள் யூடியூப்பில் பாடி சம்பாதித்து வருகிறார்கள். மேலும் சிங்கராகவும் பல் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார் பிரியங்கா.