புற்றுநோயால் மரணமடைந்த அம்மா!! சூப்பர் சிங்கர் புண்யா காணாமல் போக இது தான் காரணம்..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அப்படி இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் பலர் சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடித்து வருகிறார். அந்தவகையில் லண்டன் வாழ் தமிழ் பெண்ணாக சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சென்று பிரபலமானவர் தான் பாடகி புண்யா.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பல எமோஷ்னலான விசயங்களை பகிர்ந்துள்ளார். மருத்துவ படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது என் அம்மாவிற்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் எனக்கு பிடிக்கும், ஆனால் இந்த வேலையை தொடர்ந்து என்னால் பண்ண முடியுமா? என்ற கேள்வி இருந்தது. அப்போது தான் என் அம்மா, நீ ஏன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறி சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
ஒரு நிகழ்ச்சியை லண்டனின் பண்ணியபோது சூப்பர் சிங்கர் ஆடிஷன் நடக்கிறது என்று என்னிடம் கூறினார்கள். ஆடிஷன் முடிந்து 6 மாதம் சென்னையில் இருந்தது, அப்போது தான் மீயூசிக் எவ்வளவு முக்கியம் எனக்கு என்று புரிந்தது. ஒரு முறையாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்து, வந்தேன். 6 முதல் 8 மாதம் வரை ஓவ்வொரு வாரமும் ஷூட்டிங் நடக்கும். ஒரு ரவுண்ட் முடிந்த பின்பும் யோசிக்க நேரமில்லை, என் பெஸ்ட்-ஐ நான் கொடுக்க வேண்டும் என்று தான் தோன்றியது.
சூப்பர் சிங்கர் போறதுக்கு அம்மாவின் கனவு. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். லண்டனில் இருக்கும் அம்மாவிடம் நேரம் செலவிட எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அம்மா நீ அங்கிருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று சீசன் முழுவதும் இருந்து முடித்தப்பின் 2 நாட்களில் அம்மாவிற்கு முடியாமல் போனதால் லண்டன் சென்றுவிட்டேன். அங்கு சென்ற 2 மாதத்தில் கொரானா சமயத்தில், அம்மா புற்றுநோயால் மரணமடைந்துவிட்டார்.
அதன்பின் என்னிடம் பலர் எங்கே சென்றுவிட்டீர்கள் என்ன ஆனது என்று கேட்டார்கள். 1 ஆண்டுகளுக்கு பின் நான் மீண்டு வந்து மீண்டும் பாடத்துவங்கினேன். அம்மாவின் ஆசீர்வாதத்தால், என் குடும்பத்தினர் ஆதரவுடன், என் சீசன் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பின் இப்போது இங்கே வந்துவிட்டேன்.
You May Like This Video