சர்ச்சையில் சிக்கிய ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.. உண்மையை கூறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள படம் விருமன். இயக்குனர் சங்கர் மகளான அதிதி சங்கர் மருத்துவ படிப்பை விட்டுவிட்டு இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
கிராமத்து பெண்ணாக நடித்து துறுதுறுவென பேசும் அவர் பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் நடித்ததோடு, மதுர வீரன் என்ற பாடலையும் பாடியிருக்கிறார் அதிதி சங்கர். யுவன் இசையில் இப்பாடலை ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அதிதி பாடியிருந்தார்.

இந்நிலையில், அதிதி இப்பாடலை பாடுவதற்கு முன்பு சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் முதலில் பாடியிருக்கிறார். அதன்பின் யுவன் ராஜலட்சுமி பாடியதை தூக்கிவிட்டு அதிதி சங்கர் பாடியதை வைத்துள்ளார். இது தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில் இதுகுறித்து சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி விளக்கமளித்துள்ளார்.
முதலில் நான் தான் பாடி இருந்தேன். ஆனால் இப்பாடலை பலரை வைத்து பாடவைப்பார்கள் இசையமைப்பாளர்கள். அது எந்த குரல் செட்டாகுதோ அதைதான் இசையமைப்பாளர்கள் தேர்வு செய்வார்கள்.
அப்படி தான் என் குரலை தூக்கிவிட்டு அதிதி நன்றாக பாடியதால் படத்தில் வைத்திருக்கிறார்கள். அவர் நன்றாக தான் பாடியிருக்கிறார். அதிதி சங்கர் பாடியது எனக்கு வருத்தமளிக்கவில்லை. அவரை விமர்சித்து பேசுவது வறுத்தமளிக்கிறது என்று ராஜலட்சுமி கூறியுள்ளார்.