சூப்பர் சிங்கர் 11 கிராண்ட் லான்ச்!! நடுவராக இந்த பிரபல இயக்குநர்..

Super Singer Star Vijay Mysskin Tamil Singers
By Edward Jul 25, 2025 12:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிறைவடைந்து சூப்பர் சிங்கர் பக்தி நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

விரைவில் இந்நிகழ்ச்சியும் நிறைவு பெறவுள்ள நிலையில், சூப்பர் சிங்கர் சீசன் 11ன் பிரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

சூப்பர் சிங்கர் 11 கிராண்ட் லான்ச்!! நடுவராக இந்த பிரபல இயக்குநர்.. | Super Singer Season 11 Four Team Captains Mysskin

20 போட்டியாளர்களுடன் தொடங்கப்போகும் இந்த புதிய சீசனில் கடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 20 சீசன்களில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றியவர்கள் தான் கலந்து கொள்ளவுள்ளார்களாம்.

ஒவ்வொரு சீசனிலும் சில வித்தியாசங்களை காட்டும் சூப்பர் சிங்கர் குழுவினர், சீசன் 11ல் தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புது கான்செப்ட்டில் ஆரம்பமாகவுள்ளது. இதில்

நடுவர்களாக

இதில் சூப்பர் சிங்கர் சீசன் 11ன் நடுவர்களாக கொங்கு தமிழ் - அனுராதா ஸ்ரீராம், எங்கும் தமிழ் - உன்னிகிருஷ்ணன், சென்னை தமிழ் - இசையமைப்பாளர் தமன், டெல்டா தமிழ் - இயக்குநர் மிஸ்கின் என கலந்து கொள்கிறார்கள். விரைவில் சூப்பர் சிங்கர் சீசன் 11-ன் கிராண்ட் லான்ச் நிகழ்ச்சியும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Gallery