சூப்பர் சிங்கரில் இலங்கை தமிழ் பெண்!! பெற்றோர்களை உருகவைத்த மிஸ்கின்..
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிப்பப்பாகி வருகிறது. இந்தவாரம் நா. முத்துகுமார் ஸ்பெஷல் ரவுண்ட் நடந்துள்ளது.
அப்போது பாடிய பெண் ஒருவர், பானா காத்தாடி படத்தின் என் நெஞ்சில் பாடலை பாடி முடித்துவிட்டு, தான் எங்கிருந்து வந்தேன் என்ன செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதில், என்னுடைய அப்பா அம்மா, இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் புலம்பெயர்ந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 30 வருடமாக வசித்து வருகிறோம் என்று கூறியதும் சீமான், ஈலத்தில் வாழும் அனைவருமே தொப்புள் கொடி உறவு என்பார்கள். தமிழ்க்கொடி உறவுன்னாங்க என்று கூறியிருக்கிறார்.
மேலும், அப்பெண்ணின் தந்தை, என் மகள் மருத்துவம் படிக்கிறாள், எங்களால் பணக்கட்ட முடியவில்லை என்று கூறியிருக்கிறார். உடனே நடுவர் மிஸ்கின், என்ன படிக்கிற என்றதும் chemotherapyக்கு 1. 30 லட்சம் கட்டுகிறார்கள் என்று கூறினார் அப்பெண்.
அதற்கு மிஸ்கின், இனிமேல் உன்னுடைய எல்லா பள்ளி செலவும் நான் தான் கட்டப்போகிறேன் என்றதும் அரங்கில் இருந்த அனைவரும் உருகி கண்ணீர் விட்டனர். மிஸ்கினின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.