கூடும் அழகு!! நகைக்கடைத் திறப்பு விழாவில் மின்னும் சூப்பர் சிங்கர் சிவாங்கி...
சூப்பர் சிங்கர் சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.
பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.
பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, தற்போது வேளச்சேரியில் Kushal’s Fashion Jewellery என்ற நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
சேலையில் மின்னும் அழகில் அவரின் வீடியோவை பார்த்த பலரும் வியந்து ஹார்ட்டின் கொடுத்து வருகிறார்கள்.