சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது? அடையாளம் தெரியாமல் மாறி வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 10 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
தற்போது 9வது சீசன் ஆரம்பித்து நன்றாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.

அவரின் குரலுக்கு பாடும் பாடலுக்கு சம்பந்தமே இல்லாமல் பாடி அனைவரையும் தன் பக்கம் இழுத்தார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றது தான் சிவாங்கியின் மார்க்கெட்டை அதிரவைத்தது.
பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கி வரும் சிவாங்கி, கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது கூடிய விரைவில் என்று பதிவிட்டு இதுவரை இல்லாத அழகிய சேலையில் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி சிவாங்கியை பாராட்டி வருகிறார்கள்.