மலேசியாவுக்கு பறந்த சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! யார் யார் கூட தெரியுமா?

Harris Jayaraj Super Singer Malaysia Tamil Singers Saindhavi
By Edward Jul 05, 2025 04:43 AM GMT
Report

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

மலேசியாவுக்கு பறந்த சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! யார் யார் கூட தெரியுமா? | Super Singer Srinisha In Kuala Lumpur Malaysia

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா.

அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சென்று சிறப்பான பாடலை பாடி அசத்தினார்.\

ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கச்சேரி

இந்நிலையில் ஜூலை 5 ஆம் தேதி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கச்சேரி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் Axiata Arena, Bukit Jalil அரங்கில் நடக்கவுள்ளது.

மலேசியாவுக்கு பறந்த சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! யார் யார் கூட தெரியுமா? | Super Singer Srinisha In Kuala Lumpur Malaysia

இந்த கச்சேரிக்கு ஸ்ரீநிஷா சென்றுள்ளார். அவருடன் பல பாடகர்கள் சென்றுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.