விஜய் டிவி சூப்பர் சிங்கர் VJ பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ
தொகுப்பாளினி பிரியங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் என பல நிகழ்ச்சியில் கலகலப்பாக தொகுத்து வழங்குவதில், இவரை அடிக்கொள்ள ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
மக்கள் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்று முடிந்தது. தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை பிரியங்கா கரம்பிடித்தார்.
இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு தற்போது புதிதாக துவங்கவுள்ள ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கவிருக்கிறார் பிரியங்கா. வருகிற ஜூன் 15ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா, ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு எபிசோடை தொகுத்து வழங்குவதற்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை பிரியங்கா சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.