கேவளமாக திட்டிய இயக்குனர்? நானா இருந்தா தூக்குல தொங்கிருப்பேன்!! உசுப்பேற்றிவிட்ட சூப்பர் ஸ்டார்

stunt super star padayappa rajinikanth ksravikumar kanalkannan
By Edward Apr 11, 2022 08:15 PM GMT
Report

90களில் இந்தியளவில் 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்ரெண்ட் இயக்குனராகவும் ஸ்ரெண்ட் மாஸ்டராகவும் பணியாற்றியவர் கனல் கண்ணன். ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு வேலை செய்தவர்.

அவர் வாழ்க்கையில் மிகமுக்கிய படமாக இருந்தது படையப்பா. சூப்பர்ஸ்டார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படத்தின் சில அனுபவங்களை சமீபத்தில் கனல் கண்ணன் சித்ரா லட்சுமணன் பேட்டியில் கூறியுள்ளார். படையப்பா படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது.

அப்படத்தின் போது ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பேட்டி ஒன்றில் ரஜினி தன்னிடம் சொன்ன விஷயம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "கே.எஸ். ரவிக்குமார் என்னை எப்போதும் செட்டில் ஸ்டண்ட் செய்யும் போது பயங்கரமாக திட்டுவார்.

என்னை அறிமுகம் செய்ததே அவர் தான் என்பதால் அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். அப்படியொருமுறை கே எஸ் ரவிக்குமார் என்னை படுமோசமாக திட்டித்தீர்த்தார். இதை கண்ட சூப்பர் ஸ்டார்,

இதுவே என்னை அவர் திட்டி இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்று காமெடியாக கூறியிருக்கிறாராம். மேலும் அப்படத்தின் போது கனல் கண்ணன் கேட்ட ருத்ராட்சையை பரிசாக அளித்துள்ளாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.