நெல்சா ஹீரோயின் பக்கமே வந்திராத! எல்லா வேலையும் பாத்துக்க ..கண்டீஷன் போடும் சூப்பர் ஸ்டார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு யாருடன் சேர்ந்து அடுத்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி பல மாதங்களாக இருந்து வந்தது. அதற்காக பல இயக்குனர்களிடன் கதையையும் கேட்டார். அதில் அண்ணாத்த சிவாவும் ஒருவராக இருந்து அவரா இருக்குமோ என்று அதிர்ச்சியையும் கொடுத்தார் சூப்பர் ஸ்டார்.
இந்நிலையில் தலைவர் 169 படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ மூலம் தெரிவித்தது.
அனிரூத் இசையில் உருவாகவுள்ள இப்படத்தில் யார் ரஜினிக்கு ஜோடியா நடிப்பார் என்ற கேள்வி எழுந்து வந்துள்ளது. 70 வயதுக்கு ஏற்ற மாதிரி ஓரளவிற்கு அவரின் வயதில் ஒரு நடிகையை நானே தேடி பார்த்து கொள்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் கூறியிருக்கிறாராம்.
அந்த வரிசையில் மீனா, குஷ்பு, சிம்ரன், நயன் போன்றவர்களை நெல்சனிடம் கைக்காட்டி வருகிறாராம்.