யாருக்கும் அடங்காத கமல்ஹாசன்! கையைப் பிடித்து கெஞ்ச விட்ட பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ள கமல் ஹாசன் அப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
விக்ரம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமல்ஹாசனும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இணைந்து பேட்டிகளை கொடுத்தும் நிகழ்ச்சிகளை பங்கேற்றும் பிரமோஷன் செய்து வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலுக்குக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
விஜே டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மறக்க முடியாத சில அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். 1997ல் உருவான தேவர் மகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அப்படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய திட்டடோம்.
அதற்காக சிவாஜி கணேசன் ஐய்யா ரோலுக்கு பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினாராம் கமல். அதற்காக அவரிடம் கையைப்பிடித்து கெஞ்சியும் அவர் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகர் திலீப் குமார்.
இதற்கு காரணம் நடிப்பில் தற்போது விருப்பமில்லை என்று கூறியதால் அவருக்கு பதில் நடிகர் அம்ப்ரிஷ்புரியை வேறுவழியின்றி நடிக்க வைத்தோம் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.