10 நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்த ஒரே சூப்பர் ஸ்டார்!! யார் தெரியுமா?
10 நடிகைகளுடன் ரொமான்ஸ்
பான் இந்தியா, ஓடிடி வருகைக்கு முன் நடிகைகளின் சினிமா எண்ட்ரி என்பது குறைவாகவே இருந்தது. சில ஸ்டார் நடிகைகள் மட்டுமே தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தனர். குறிப்பிட்ட நடிகைகளுடன் தான் முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர்.
அப்படி இன்று கயாடு லோஹர், ஸ்ரீ லீலா, மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன், ருக்மிணி வசந்த் என புதுப்புது முகங்கள் படத்து தற்போது அறிமுகமாகி கமிட்டாகி வருகிறார்கள். ஆனால், சதா, அனுஷ்கா, பிரியாமணி, திரிஷா, நயன் தாரா, ஸ்ரேயா போன்ற நாயகிகள் தென்னிந்திய சினிமாவில் நடித்து அதிரடி காட்டி வந்தனர்.

பாலகிருஷ்ணா
அப்படி டாப் நடிகைகளாக இருந்த நடிகைகள் 10 பேருடன் ஒரே நடிகர் ஜோடியாக நடித்துள்ளாராம். அவர் வேறு யாருமில்லை நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தான். அப்படி, நடிகை சதாவுடன் வீரபத்ரா படத்தில் நடித்திருக்கிறார் பாலைய்யா.

அதேபோல் நடிகை அனுஷ்காவுடன் ஒக்கமகாது படத்தில் நடித்துள்ளார். நடிகை திரிஷா மற்றும் ராதிகா ஆப்தேவுடன் லயன் என்ற படத்திலும் நடிகை பிரியாமணியுடன் மித்ருடு என்ற படத்திலும் நயன் தாராவுடன் 3 படங்களில் நடித்துள்ளார் பாலகிருஷ்ணா.

ஸ்ரீ ராம ராஜ்ஜியம், சிம்ஹா, ஜெய் சிம்ஹா போன்ற படத்திலும் நடித்திருக்கிறார் நயன்.
நடிகை ஸ்ரேயா சரணுடன் சென்ன கேசவ ரெட்டி, பைசா வசூல், கெளதமி புத்ர சாதகர்ணி என்ற 3 பட்ங்களில் பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார்.

மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவருடன் கதாநாயகியாக நடிக்காவிட்டாலும், கதாநாயகுடு படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாசனுடன் வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் நடிகை ஸ்ரீலீலாவுடன் பகவந்த் கேசரி என்ற படத்திலும் நடித்துள்ளார் பாலகிருஷ்ணா.

நடிகை சம்யுக்தா மேனனுடன் அகண்டா2 படத்தில் நடித்துள்ளார் பாலகிருஷ்ணா.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        