கணவருடன் சண்டை.. தற்கொலை என வதந்தி.. பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா
                                    
                    Archana Chandhoke
                
                        
        
            
                
                By Kathick
            
            
                
                
            
        
    சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் VJ அர்ச்சனா. இவர் 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் பயணித்து வருகிறார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கினார். அந்த நிகழ்ச்சியின் மூலம் சில ட்ரோல்களையும் இவர் சந்தித்தார். இந்நிலையில் VJ அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டதாக ஒருவர் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பி இருக்கிறார்.

அந்த நபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் VJ அர்ச்சனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் "டேய்.. பர்ஸ்ட் நல்ல போட்டோ போடு" என அந்த நபரை கலாய்த்து இருக்கிறார்.
"இரண்டாவது விஷயம்.. புருஷன் கூட சண்டை போட்டு தற்கொலை.. நோ சான்ஸ். அவரைதான் அடிப்பேன்" எனவும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        