சிங்கபூர் காதல் ஜோடி சூரியவேலன் - ரூபினியின் மகளா இது! புகைப்படம் இதோ..
உலகத்தில் அனைத்து இடங்களிலும் தமிழ் வாழ்கிறது என்பதற்கு அடையாளமாக இருப்பது தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் நம்முடைய தமிழை மேம்படுத்த பாடல்களால் உலகறியச்செய்து வருகிறார்கள். அந்தவரிசையில் இண்டிபெண்டண்ட் கலைஞராக இருந்து தற்போது ரியல் ஜோடிகளாக கலக்கி கொண்டு வருபவர்கள் சிங்கபூர் வாழ் தமிழரான டி சூரியவேலன் - ரூபினி.
ஆரம்பத்தில் இயக்குநராக இருந்து ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். இதையடுத்து ரூபினியுடன் ஜோடி போட்டு நடித்தும் வந்தார். உசுரய தொலைச்சேன் உனக்குள்ள என்ற ஆல்பம் பாடல் மூலம் தான் இருவருக்கும் காதல் கெமிஸ்டி உருவானது. கொஞ்சநாள் பிறகு இருவருக்கும் தோனியதாலும் செட்டாகாது என்று கூறி பிரிந்து பின் சேர்ந்தோம் என்று சமீபத்தில் காதல் திருமணம் பற்றி விவரமாக கூறியுள்ளனர் சூரியவேலன் - ரூபிணி.
2017ல் அவர்கள் ஆரம்பித்த 360entertainment_pro தயாரிப்பில் Joe: The Black Assassin படத்தினை இயக்கிய பின் ரூபினியை கரம்பிடித்தார் சூரியவேலன்.
தற்போது இரு வயதான பர்வீஷா ஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். தற்போது அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.



