ஊத்தி மூடிய சூர்யாவின் படம்.. பாலாவால் இப்படியொரு நிலை, ஆனால்

Suriya Bala
By Kathick May 25, 2022 11:15 AM GMT
Report

தற்போது பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பின் போது, பாலாவிற்கும் நடிகர் சூர்யாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவை காலையில் இருந்து மதியம் வரை கால்கடுக்க வெயிலில் ஓடவைத்துள்ளாராம் இயக்குனர் பாலா. இதனால், கடுப்பான நடிகர் சூர்யா தனக்கு வயிற்றுவலி என்று கூறிவிட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இப்படம் பாதிலேயே நிறுத்தப்படுகிறது என்பது போல் கூறப்பட்டது.

ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது என்றும், கோவாவில் நடைபெறுவதாக இருந்த படப்பிடிப்பு தற்போது சென்னையிலேயே துவங்கும் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்னவெல்லாம் நடிக்கவிருக்கிறது என்று..