மூனே மாசத்துல முடிக்கனும்! இயக்குனர் பாலாவுக்கே கண்டீஷன் போடும் நடிகர் சூர்யா?

bala suriya jyothika
By Edward Mar 04, 2022 07:55 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதியில் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாரித்து நடிக்கவுள்ளார் சூர்யா. ஜோதிகா இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியானது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் கால்ஷீட் பாதிப்படையக் கூடாது என்பதற்காக பாலாவிடம் கண்டீஷன் போட்டுள்ளாராம்.

இப்படத்தினை முடிக்க மூன்றே மாதம் தான் கால்ஷீட் கொடுப்பேன். அதன்பிறகு இழுத்தடிக்க கூடாது என்று கூறியுள்ளாராம். இதனால் பாலா கதையை விறுவிறுப்பாக ஆரம்பிக்க தயாராகியுள்ளாராம்.