சூர்யாவுக்காக ஜோதிகா செய்த மிகப்பெரிய தியாகச்செயல்!! மேடையில் போட்டுடைத்த ரோலக்ஸ்..

Suriya Jyothika
By Edward Apr 25, 2023 04:30 PM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வரும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு முன் ஜெய் பீம் படத்திற்காக தேசிய விருதினை பெற்று ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்தார். அதேபோல் பிரபல விகடன் விருதுவிழாவில் கூட ஜெய் பீம் படத்திற்காக 5 விருதுகள் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, ஜோதிகாவை பற்றி நெகிழ்ச்சியடைந்து பேசியிருக்கிறார்.

இந்த விருதை தனது மனைவி ஜோதிகாவிற்காக அர்பணிக்கிறேன் என்றும் ஜோதிகா தனக்காக நிறைய தியாங்கங்களை செய்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். என்னை நடிக்க வைத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி குழந்தைகளை கவனித்துக்கொண்டார்.

எப்போது எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார் என்றும் என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலும் ஜோதிகாவின் பங்கு இருப்பதாகவும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பெற்றோரிடம் இருந்து ஜோதிகா சூர்யாவை பிரித்துவிட்டார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் சூர்யா பேசியது அதையெல்லாம் சுக்கு நூறாக்கியுள்ளது.