அண்ணாத்த இயக்குனரா? ஓகே கூறி நாசுக்காக எஸ்கேப்பான நடிகர் சூர்யா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்தும் தயாரித்தும் வருகிறார். இரு ஆண்டுகளுக்கு தேவையான படங்களால் பிஸியாக இருந்து வரும் சூர்யா, அண்ணாத்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.
இதை இயக்குனர் சிறுத்தை சிவாவும் பேட்டியொன்றில் உறுதி செய்திருந்தார். யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் இப்படியொரு செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தினை கொஞ்சம் தள்ளி வைத்து சிவா படத்தில் நடிக்கவிருப்பதாக இருந்தது.
இந்நிலையில் கால்ஷீட் காரணமாக சிறுத்தை சிவா படத்தில் தற்போதைக்கு நடிக்க போவதில்லை என்ற முடிவுக்கு சூர்யா வந்து விட்டாராம். அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருக்கையில் சில காலம் கழித்து பண்ணலாம் சிவா இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என்று மறைமுகமாக கூறிவிட்டாராம் சூர்யா.