மும்பை ரோட்டில் ஜோடியாக வாக்கிங்! லீக்கான சூர்யா-ஜோதிகா புகைப்படங்கள்..
mumbai
jothika
suriya
tamilactor
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் தான் பல படங்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இரு குழந்தைகளை வழி நடத்துவதில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது குழந்தைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். எந்த விழாவிற்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக செல்லும் சூர்யா - ஜோதிகா புகைப்படங்கள் வெளியாகி கவரும்.
அப்படி காலையில் இருவரும் வாக்கிங் சென்ற புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. இதை பிரபல புகைப்பட கலைஞர் வைரல் பயாணி வெளியிட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்களை மட்டும் கவனம் செலுத்தி வந்த பயாணி தற்போது தென்னிந்திய பிரபலங்களை கவர் செய்து வருகிறார்.