சூர்யா - ஜோதிகாவின் மகள் தியாவா இது!! அம்மாவுக்கே டஃப் கொடுப்பாங்களோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல படங்களில் ஒன்றாக நடித்து வந்த ஜோதிகாவை திருமணம் செய்து தியா என்ற மகளையும் தேவ் என்ற மகனையும் பெற்றெடுத்தனர்.
குழந்தை, குடும்பம் என்று பார்த்து வந்த ஜோதிகா மீண்டும் நடிக்க ஆரம்பித்து மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக மும்பை சென்றதும் ஜோதிகா - சூர்யாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள்.
தற்போது சூர்யா- ஜோதிகா தம்பதியினர் தன்னுடைய மகன், மகளுடன் குடும்ப திருமணத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குடும்பமாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சூர்யா - ஜோதிகாவின் மகள் பெரிய பெண்ணாக வளர்ந்ததையும் அழகில் அம்மாவையே மிஞ்சிவிடுவரோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.