சூர்யாவைவிட நான் 3 மடங்கு சம்பளம் வாங்கினேன்..ஆனா இப்போ!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்...

Suriya Jyothika
By Jai Aug 06, 2026 01:30 PM GMT
Report

சூர்யா - ஜோதிகா

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜோதிகா, தன் கணவர் சூர்யாவுடன் சேர்ந்து போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார். இதனையடுத்து ஆங்கில ஊடகத்திற்கு சூர்யா - ஜோதிகா பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்தனர்.

சூர்யாவைவிட நான் 3 மடங்கு சம்பளம் வாங்கினேன்..ஆனா இப்போ!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்... | Suriya Jyothika Equality Is The Secret

அதில் ஜோதிகா, என் சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் சூர்யாவைவிட 3 மடங்கு சம்பளம் அதிகமாக நான் வாங்கினேன். இப்போது நான் அந்த சம்பளத்தைவிட 30 மடங்கு குறைவாக வாங்குகிறேன் என்று கூறியிருக்கிறார் ஜோதிகா. இதைக்கேட்டு சூர்யா வாய்விட்டு சிரித்துவிட்டார்.

மேலும் ஜோதிகா பேசுகையில், ஒரு மனிதராக, நடிகராக, கணவராக சூர்யா சிறந்தவர். சமத்துவம் என்பது அவருடைய பிறப்பில் இருந்தே வந்துள்ளது என்று நினைக்கிறேன். அது எப்போதும் அவர் சிந்தனையில் இருக்கிறது. உங்களுடன் ஒரு பெண் இருக்கிறார் என்று உணர வேண்டும். அவளுக்கு சமைக்க விருப்பமில்லை என்றால் அப்படியே விட்டுவிட வேண்டும்.

சூர்யாவைவிட நான் 3 மடங்கு சம்பளம் வாங்கினேன்..ஆனா இப்போ!! நடிகை ஜோதிகா ஓபன் டாக்... | Suriya Jyothika Equality Is The Secret

நான் ஒரு பெண்ணியவாதியாக பேச விரும்பவில்லை, ஆனால் வீட்டில் நாங்கள் சமமாக இருக்கிறோம். ஒரு ஆணின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் உண்மையான உணர்வு தான் சமத்துவம். அது சூர்யாவிடமுள்ளது. நான் சமையலறையில் சமைக்கும்போது, அவரும் சமையலறைக்கு வந்து என்னோடு சமைப்பார்.

எல்லாவற்றிலும் நாங்கள் இருவரும் சேர்ந்துதான் செய்வோம். சினிமாத் தொடங்கி, குழந்தைகளை வளர்ப்பது வரை ஹாலிடேவுக்கு செல்வது எல்லாமே சேர்ந்தே முடிவெடுப்போம். நாங்கள் ஒருவர் மற்றவர் வளர்வதை பார்ப்பதில் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறோம் என்று ஜோதிகா பெருமையுடன் கூறியிருக்கிறார்.