மும்பையில் செட்டிலானதும் இப்படியா!! முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சூர்யா - ஜோதிகா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் மலையாளம் மற்றும் இந்தி படத்தின் சூட்டிங்கில் பிஸியாகவும் இருந்து வருகிறார்.
பாலிவுட் படத்திற்காக சூர்யாவுடன் மும்பையில் கோடிக்கணக்கில் பங்களா வாங்கி செட்டிலாகிய விசயம் பெரியளவில் பேசப்பட்டது. படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வீடியோவை வெளியிட்டு ஃபிட்டாக மாறியுள்ளார் நடிகை ஜோதிகா.
இந்நிலையில், கங்குவா படத்திற்காக புதிய லுக்கில் காணப்பட்ட சூர்யா, தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை ஏற்றியிருக்கிறார்.
முகம் மாறி உடல் பருமனாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து சூர்யா ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
சமீபத்தில் ஜோதிகா, சூர்யாவுடன் கங்குவா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொடைக்கானல் பகுதியில் கங்குவா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஜோதிகா சென்றுள்ளாராம்.
