மும்பையில் கோடியில் பங்களா!! வீட்டிற்கு இந்தியில் பெயரை எழுதிய ஜோதிகா - சூர்யா..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது அவரது 42வது படமான சிறுத்தை சிவா இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் மனைவி நடிகை ஜோதிகாவின் பாலிவுட் படத்திற்காக மும்பையில் செட்டிலாகி அனைத்து வேலைகளையும் பார்த்தும் வருகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜோதிகாவின் படத்திற்காக அவர் எளிதாக செல்ல மும்பையில் பல கோடி மதிப்பிலான வீட்டினை வாங்கி குடியேறியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் சூர்யா ஜோதிகாவுக்கு வாங்கிய அந்த வீட்டின் பெயரை இந்தியில் எழுதி பெயர் பலகை வைத்திருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், சூர்யா தன் குடும்பத்தினருடன் ஓட்டல் ஒன்றிற்கு சாப்பிட்டி வெளியில் வந்த இடம் என்று அவரது வீடு கிடையாது என்றும் அவரது ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஜோதிகா, மாமனார் சிவக்குமாரிடம் இருந்து சூர்யாவை பிரித்திவிட்டதாகவும் அவர்மீது புகார் வந்த நிலையில் தற்போது இந்த விசயமும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
You May Like This Video