ரொமாண்டிக் லுக்கில் சூர்யா - ஜோதிகா எடுத்த போட்டோஷூட்..
Suriya
Jyothika
Photoshoot
Tamil Actress
By Jai
சூர்யா - ஜோதிகா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஜோதிகா. சூர்யாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜோதிகா, அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா சினிமாவில் இருந்து விலகியவர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது பாலிவுட் படங்களில் முழு கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, தன் கணவருடன் சேர்ந்து ரொமாண்டிக் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். ரொமான்ஸ் செய்தபடி இருவரும் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

