சூர்யாவுக்கு இவரால் தான் தேசிய விருது கிடைச்சதா? சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்..

Suriya Aparna Balamurali G V Prakash Kumar Sudha Kongara Soorarai Pottru
By Edward Jul 22, 2022 01:27 PM GMT
Report

இந்திய சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக கொடுக்கப்படும் விருது தான் தேசிய திரைப்பட விருது. அதன் 68வது தேசிய விருது பட்டியல் இன்று வெளியாகியது. மக்கள் மத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சூரரை போற்று படத்திற்காக 5 விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த பின்னணி இசைக்கு ஜிவி பிரகாஷ் ராஜ், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி , சிறந்த திரைக்கதை ஆசிரியருக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவும், சிறந்த படம் சூரரை போற்று போன்ற விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது.

இதற்கு சினிமாத்துறையை சார்ந்த இந்திய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சூரரை போற்று விருதுக்காக சூர்யாவுக்கு கிடைக்க இதனால் வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, சூர்யாவின் மேனேஜரான தங்கதுரை தேசிய திரைப்பட விருது தேர்க்குழுவில் இடம் பெற்றிருப்பதால் சூர்யாவுக்கோ அவரது படத்துக்கோ விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற பதிவினை போட்டுள்ளார்.

தற்போது அதை தற்போது விருது வெளியான பின்னும் டிவிட் செய்துள்ளார் பிஸ்மி. தன் மேனேஜர் சிபாரிசு செய்ததால் தான் சூர்யாவுக்கு சிறந்த விருது கிடைத்திருப்பதாக மறைமுகமாக விமர்சித்திருப்பதை சூர்யா ரசிகர்கள் கடுமையாக திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Gallery