சூர்யாவுக்கு நடிகை என்றாலே..சூப்பர் ஸ்டாரிடமே தம்பி கார்த்தி சொன்ன உண்மை...

Karthi Suriya Gossip Today Nandamuri Balakrishna Kanguva
By Edward Nov 06, 2024 01:38 PM GMT
Report

கங்குவா

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகளவில் கங்குவா படம் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவுடன் சேர்ந்து நடிகர் சூர்யா, பாபி தியோல், இயக்குநர் சிறுத்தை சிவா இந்தி, தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

சூர்யாவுக்கு நடிகை என்றாலே..சூப்பர் ஸ்டாரிடமே தம்பி கார்த்தி சொன்ன உண்மை... | Suriya With Balakrishna For Kanguva Promotion

கார்த்தி சொன்ன உண்மை

இந்நிலையில் தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும், Unstoppable With NPK நிகழ்ச்சியில், சூரியா, பாபிதியோல், சிறுத்தை சிவா கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில், பாலைய்யா சூர்யாவிம் தம்பி நடிகர் கார்த்தியிடம் கால் செய்து, உங்கள் அண்ணன் நிறைய பொய் சொல்கிறாரே என்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி, அவர் சிறு வயதிலிருந்தே அப்படித்தான் சார். நிறைய பொய் சொல்வார்.

அவருக்கு ஹீரோயின்கள் என்றாலே இஷ்டம்தான் என்று கூறியிருக்கிறார். இதனால் அங்கிருந்த சூர்யா அதிர்ச்சியில், நீ கார்த்தி இல்லடா கத்திடா என்று காமெடியாக கூறியிருக்கிறார். இதனால் பாலைய்யாவும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.