அவள் என் மகள் இல்லை என்று ஒதுக்கிய ராஜ்கிரண்.. ஏங்கி துடித்து காலில் விழுந்து சரண்டரான தம்பதிகள்..
நடிகர் ராஜ்கிரணின் மகள் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி ஒரு சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார் என செய்தி நேற்றில் இருந்து வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

மகளை துரத்திய ராஜ் கிரண்
இந்நிலையில் அவர் என் மகள் இல்லை, வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரண் விளக்கம் அளித்து இருக்கிறார். மேலும் அவரை காதல் திருமணம் செய்த சீரியல் நடிகர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இதை செய்திருக்கிறார் எனவும் ராஜ்கிரண் குற்றம்சாட்டி இருந்தார்.
முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட சீரியல் நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை, தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

தூதுபோன ராஜ்கிரண் மனைவி
இந்த விசயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்று கூறியிருந்தார். இறுதி வரையில் அவர்களை ஏற்கப்போவதில்லை என்ற முடிவில் இருந்து வருகிறார் ராஜ் கிரண்.
ஆனால் தற்போது அந்த தம்பதியினர் ராஜ்கிரணின் மனைவியை சந்தித்து அவரிடம் தஞ்சம் புகுந்துள்ளார்களாம். எப்படியாவது அப்பாவை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டி அவரிடம் கெஞ்சி இருக்கிறார்களாம்.
இதற்கு காலில் கூட விழத்தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்கள். இதன்பின் மனைவி பேச்சை கேட்டு அவரை ஏற்றுக்கொள்வாரா ராஜ் கிரண் என்று பலரும் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள்.