பிகில் பாண்டியம்மாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பிரபல நிகழ்ச்சியால் வந்த விணைதானாம்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஆர்பிக்காக ஒளிப்பரப்பு செய்யப்படும். அந்தவரிசையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் அர்ஜுனை வைத்து சர்வைவர் நிகழ்ச்சி ஒரு வெளிநாட்டு தீவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். காட்டில் எப்படிபட்ட டாஸ்க்கையும் செய்து கொண்டிருக்கும் இந்திரஜாவிற்கு முகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சீக்கிரமாகவே இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறினார். அதுமட்டுமில்லாமல் இந்த ஷோவில் மூலம் இவருக்கு தோல் பிரச்சனை மற்றும் உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் சர்வைவர் ஷோவில் நீரில் விளையாடியதால் தற்போது இவருக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து முடி உதிர்வு ஏற்பட்டு வருவதால் இனி படங்களில் நடிக்க முடியாது என கூறி வருகிறார்.

மேலும் இதில் இருந்து மீள்வதற்காக தற்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் கூடிய விரைவில் படங்கள் நடிப்பார் எனவும் கூறி வருகின்றனர். இதற்கு ஒரு சில ரசிகர்கள் முடி உதிர்வு எல்லாம் அனைவருக்கும் வருவது தான் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தேவையில்லாமல் இதையெல்லாம் பெரிதாக பேசி வருகிறார்கள் என கூறி வருகின்றனர். அதற்காக சிகிச்சை செய்தால் நலமடையலாம் என்றும் கூறி வருகிறார்கள்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்