20 ஆண்டுகால பந்தம்!! மீண்டுல் கல்யாணம் செய்த சூர்யா - ஜோதிகா..காரணம் இதான்..

Suriya Jyothika Marriage
By Jai Sep 16, 2026 06:00 AM GMT
Report

சூர்யா - ஜோதிகா

சினிமா நட்சத்திரங்கள் பலர் காதலித்து திருமணம் செய்தாலும் ஒருசிலர் மட்டும் தான் நீண்ட நாட்கள் மனம் ஒத்த தம்பதிகளாக நிலைத்து இருக்கிறார்கள். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா.

திருமணமாகி 20 ஆண்டுகளை கடந்த சூர்யா - ஜோதிகா, கிறிஸ்தவ முறைப்படி தங்கள் மகன், மகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளனர். 20 Years love and war என குறிப்பிட்ட வீடியோவை பார்த்த பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்.

20 ஆண்டுகால பந்தம்!! மீண்டுல் கல்யாணம் செய்த சூர்யா - ஜோதிகா..காரணம் இதான்.. | Surya And Jyothika Got Married Again Reason

மேலும், ஜோதிகா பகிர்ந்த வீடியோவில், தன் கணவருடன் இருக்கும் காதலை மட்டுமல்லாமல் அவர்களுடைய நட்பையும் குழந்தைகளையும் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதையையும் குறிப்பிட்டுள்ளார். காதல் கல்யாணத்தோடு முடிக்கக்கூடாது என்று சூர்யா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

திருமணத்திற்குப்பின் தினமும் காதலிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன், திருமணம், நீண்டகால உறவு பற்றி சூர்யா அட்வைஸ் செய்திருந்தார். அந்த வார்த்தைகளுக்குப்பின் இப்போது ஜோதிகாவுடன் மீண்டும் உறுதிமொழி எடுத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.