"என்னையா நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே!", இணையத்தில் நடிகர் சூர்யாவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்:
Surya
By Jeeva
நடிகர் சூரியா நடித்து இன்று வெளியாக காத்திருக்கும் ஜெய் பீம் படத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றனர். படத்தில் இருளர் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தான் அவரும் தனது மனைவியும் சக நடிகையுமான ஜோதிகாவும் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையை பழங்குடி இருளர் சமூதாய மாணவர்களில் கல்வி நலனுக்காக வழங்கியுள்ளனர்.
படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக நடிகர் சூர்யா செய்யும் ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியளிப்பதாகவே உள்ளது. தற்போது இந்த செய்தியை தான் சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்தி வைரலாக்கி வருகின்றனர்.