அந்த பட கதையை கேட்டு சிம்பு துப்பிவிட்டார்!! பிரபல இயக்குநர் ஓப்பன் டாக்..
சிம்பு
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப், STR49 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பிறந்தநாளன்று 3 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் பிரபல இயக்குநர் சுசீந்திரன் 2K Love Story என்ற படத்தினை இயக்கி காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்திருந்தார். படமும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அளித்த பேட்டியொன்றில் சிம்பு பற்றி கூறியுள்ளார்.
சுசீந்திரன்
அதில், சிம்பு தன்னிடம் வந்து என்னை வைத்து அப்படியொரு படம் எடுங்கள் என்று கேட்டார். அப்போது சிம்புவிடம், நடிகர் ஜெய்க்காக நான் எழுதி வைத்திருந்த ஈஸ்வரன் பட கதையை கூறினேன். கதையை அவர் கேட்டு துப்பிவிட்டார்.
பின் சிம்புவிற்கு ஏற்ற கதையாக மாற்றி எழுதி ஈஸ்வரன் படத்தை எடுத்தேன் என்று சுசீந்திரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.