தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் போதைக்கு அடிமையானவர்! காதலி ரியா அதிர்ச்சி வாக்குமூலம்..

பாலிவுட் சினிமாவை கட்ந்த ஆண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி விஷயம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை தான். மும்மை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்து கிடந்தார்.

மரணம் குறித்து கடந்த ஒரு ஆண்டுகளாக விசாரித்து வருகிறார்கள் போலிசார். வழக்கு தொடர்பாக பலரிடம் சிபிசிஐயையும் அமலாக்கத்துறையினரும் விசாரணை செய்து வந்தனர். சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்திவிடம் விசாரணை நடத்தியதில் போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பால பல பாலிவுட் பிரபலங்கள் சிக்கி கைது செய்யப்பட்டனர். போதை பொருள் வாங்கியது, பயன்படுத்தியது, எடுத்து சென்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை ரியா மற்றும் அவரது தம்பி சோவிக், வீட்டு வேலைகாரஅல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து அவரது சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோ கஞ்சா பயன்படுத்து வந்தனர் என்று அதிர்ச்சி வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார் நடிகை ரியா.

குடும்பத்திற்கே சுஷாந்த் கஞ்சா பயன்படுத்துவது தெரியும் என்றும், அவர்களே வாங்கியும் கொடுத்துள்ளார்கள் என்றும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார் ரியா. நான் அவருடன் பழகும் முன்பே அவர் போதைபொருளுக்கு அடிமையாகி இருந்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ரியா.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்