ஷூட்டிங்கில் கையை பிடித்து இழுத்த இயக்குனர்! 46 வயது நடிகை செய்த செயல்..
பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்று நடிகையாக அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்து வந்தனர். அந்தவரிசையில் மீஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்று நடிகையாக தஸ்தக் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென்.
சினிமாவில் அறிமுகம்
46 வயதாகிய நடிகை தற்போது தத்தெடுத்து வளர்த்து வரும் இரு மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். வயது குறைவான நடிகருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்த சில வருடங்களில் அவரைவிட்டு பிரிந்துவிட்டதாக தெரிவித்தார் சுஷ்மிதா சென். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் டிவிங்கில் கண்ணா பேட்டியில் கூறியுள்ளார்.
1996ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டபெற்றப்பின் தட்லக் படத்தில் இயக்குனர் மகேஷ் பட் இயக்கத்தில் நடித்தேன். என்னுடைய முதல் படமும் அதுதான். ஆரம்பத்தில் எனக்கு நடிக்க தெரியாது என்று கூறியும் என்னை நடிக்க வைத்தனர்.
திட்டிய இயக்குனர் மகேஷ் பட்
ஒருமுறை ஷூட்டிங்கின் போது அந்த பொண்ணுக்கு நடிப்பே வரவில்லை. எப்படி நடிக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. எல்லாத்தையும் புதுதான் பார்க்கிறார் என்று ஷூட்டிலேயே விமர்சித்து பேசியுள்ளார் இயக்குனர் மகேஷ் பட். அவர் மிகச்சிறந்த இயக்குனர். ஆனால் என் வாழ்க்கை கனவை 40 ஊடகங்கக்காரர்கள் மத்தியிலும் 20 பிரடொக்ஷன் நபர்கள் முன்னிலையில் விமர்சித்து உடைத்திருக்கிறார்.
கையை பிடித்த மகேஷ் பட்
இதனால் அழத்துவங்கிய நான், முன்பே கூறியிருந்தேன் எனக்கு நடிக்க தெரியாது என்று. அதற்கும் இந்த பொண்ணுக்கு நடிக்கக்கூட தெரியல என்றார். கோபமடைந்த நான் செட்டில் இருந்து புறப்பட்டு கிளம்பினே. ஆனால் இயக்குனர் மகேஷ் பட் என் கையை பிடித்து நிறுத்தினார். நான் அவர் கையை உதறித்தள்ளிவிட்டு கிளம்பினேன்.
இதுதான் கோபம் இதை தான் நான் நடிக்க சொன்னேன் என்று கூறியிருந்தார் மகேஷ் பட். பின் அந்த காட்சியை நடித்து கொடுத்தேன் என்று சுஷ்மிதா சென் கூறியுள்ளார். நடிப்பு வரவழைக்கவே என்னிடம் மகேஷ் பட் அப்படியாக நடந்து கொண்டுள்ளார் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை சுஷ்மித சென்.