ரஜினி, கமலுக்கு நோ!! கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காமல் தாவிய அஜித் பட நடிகை சுவலட்சுமி...
தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் சுவலட்சுமி. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல நடிகர்கள் வரிசை கட்டி காத்திருந்தும் காதல் வலைவிரித்த போதும் அதில் சிக்காமல் இருந்தார் சுவலட்சுமி என்று பயில்வான் ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்துடன் ஜோடிப்போட்டு தற்போது காணாமல் போன சுவலட்சுமி பற்றி பயில்வான் கூறியது இதோ... 2000 ஆம் ஆண்டு பல நடிகைகள் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகைகள் மத்தியில் அதையெல்லாம் முடியாது என்று கூறி மறுத்து வந்தவர் நடிகை சுவலட்சுமி.
தமிழில் 13 படத்தில் நடித்து 7 படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. சேலை கட்டிக்கொண்டு போர்த்திகொண்டுதான் நடித்தார். எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் கமல் ஹாசன், ரஜினி போன்றவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டார் சுவலட்சுமி.
அதுமட்டுமில்லாமல், பல நடிகர்கள் சுவலட்சுமி மீது காதல் வலை வீசியபோது தன் முடிவில் உறுதியாக இருந்தார். நவரச நாயகன் கார்த்திக் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது கூட சுவலட்சுமிக்கு ரூட்டு போட்டிருக்கிறார். ஆனால் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காமல் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தார் நடிகை சுவலட்சுமி என்று பயில்வான் ஓபனாக பேசியிருக்கிறார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/c4621931-51df-4aad-93ea-8e1eaacfa2f8/24-665074579b432.webp)