இசையமைப்பாளர் என்னை தொட்ட இடம்..அதிர்ச்சி தகவல் கொடுத்த பாடகி ஸ்வாகதா...
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் பின்னணி பாடகியாக பாடி பிரபலமானவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். பிக்பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணனின் சகோதரியாக அறியப்படுவதற்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமாகினார். இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்து வரும் ஸ்வாகதா, திரைத்துறை அனுபவங்கள் குறித்தும் தனக்கு இசையமைப்பாளர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், அவர் பெரிய இசையமைப்பாளர், ஆனால் ஒழுங்காக பியானோ கூட கையாளத் தெரியாது. விருது கொடுப்பவர்கள் எப்படி இப்படிப்பட்ட நபர்களுகு எல்லாம் விருது கொடுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னிடம் அந்த இசையமைப்பாளர் அத்துமீறி நடந்து கொண்டப்பின், நான் அந்த கொடூரன் என்னைத் தொட்ட இடத்தில் இருக்கும் தோல் உரிந்து, புதுத்தோல் வரும்படியான சிகிச்சையை மேற்கொண்டேன். என்னுடைய மொபைலில் கூட அந்த இசையமைப்பாளரின் பெயர் வரக்கூடாது என்பது போல் செட்டிங்ஸ் அமைத்து வைத்துள்ளேன்.

இன்று நான் அந்த பயம், மன உளைச்சல் என்று எல்லாவற்றில் இருந்தும் வெளியே வந்துவிட்டேன். ஆனால் இப்போது நான் தைரியமாண பெண்ணாக இருக்கிறேன். அந்த இசையமைப்பாளரின் பெயரை நான் சொல்லாமல் விஷயத்தை சொல்லியுள்ளதால், அந்த இசையமைப்பாளர் என்னை ஏதாவது செய்ய முயற்சிக்கலாம், பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம் தற்போது இருக்கிறது.
என்னிடத்தில் மட்டுமில்லாமல் வேறு சில பெண்களுடனும் அந்த கொடூரன் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார். நான் சில பெண்களுக்கு அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர உதவியிருக்கிறேன். இது அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் தெரியும். தெரிந்து கொண்டே பின்பும் அந்த இசையமைப்பாளருடன் தான் அவர் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஃபைல்ஸ், அதைவிட மோசமானவன் அந்த இசையமைப்பாளர்.

சின்னக் குழந்தைகள் பாட வருவார்கள், அவர்களை சிசிடிவி கேமராவில் பார்த்துக் கொண்டு இருப்பான். மிகவும் மோசமானவன். நான் சீக்கிரமே ஆதாரத்துடன் அந்த இசையமைப்பாளர் யார் என்று கூறுவேன், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், எனக்கு இப்போது அந்த தைரியம் வந்துள்ளது என்று பாடகி ஸ்வாகதா தெரிவித்துள்ளார்.